search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதுவை அரசியல்"

    • படப்பிடிப்பில் பங்கேற்கும் ரஜினி புதுவையின் பிரபல ஓட்டலில் தங்கி உள்ளார்.
    • படப்பிடிப்புக்கு இடையில் ரஜினியை முக்கிய பிரமுகர்கள் பலரும் சந்திக்க பல வழிகளிலும் முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.

    புதுச்சேரி:

    லைகா நிறுவனம் தயாரிக்கும் 'லால் சலாம்' என்ற திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடிக்கிறார்.

    'லால் சலாம்' திரைப்படத்தை நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா இயக்குகிறார். இதன் முதல்கட்ட படிப்பிடிப்பு ஏற்கனவே மும்பை, திருவண்ணாமலையில் நடந்து முடிந்துள்ளது.

    இதனை தொடர்ந்து அடுத்த கட்ட படப்பிடிப்பு புதுவையில் பல இடங்களில் நடத்தப்படுகிறது. புதுவை ரோடியர் மில், சுதேசிமில் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்கனவே படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது.

    கடந்த 1992-ம் ஆண்டு வெளியான ரஜினியின் 'பாண்டியன்' படத்தின் படப்பிடிப்பு புதுவை கடற்கரை சாலையில் நடந்தது. அப்போது பெருமளவில் ரசிகர்கள் திரண்டனர். அதன் பிறகு தற்போது புதுவையில் நடைபெறும் படப்பிடிப்பில் பங்கேற்கிறார்.

    ரசிகர்கள் கூடுவதை தவிர்க்க படப்பிடிப்பு குழுவினர் ரஜினிகாந்த் நடிக்கும் காட்சி, இடம் ஆகியவற்றை ரகசியமாக வைத்துள்ளனர். அதிலும் ரஜினிகாந்த் படப்பிடிப்பு நடைபெறும் பகுதிக்கு மக்கள் அறியாத வண்ணம் வந்து காட்சிகளை நடித்து கொடுக்கிறார்.

    படப்பிடிப்பில் பங்கேற்கும் ரஜினி புதுவையின் பிரபல ஓட்டலில் தங்கி உள்ளார். அங்கு படப்பிடிப்புக்கு இடையில் ரஜினியை முக்கிய பிரமுகர்கள் பலரும் சந்திக்க பல வழிகளிலும் முயற்சிகளை எடுத்து வருகின்றனர். இதில் சிலரை ரஜினி சந்திக்கிறார்.

    ரஜினி தன்னை சந்திப்பவர்களிடம் பாண்டியன் படப்பிடிப்புக்கு பிறகு புதுவையில் ஏற்பட்டுள்ள பிரமாண்ட மாற்றம், வளர்ச்சி பற்றி வியப்புடன் விசாரித்துள்ளார்.

    நேற்று மாலை புதுவை சட்டமன்ற சபாநாயகர் செல்வம் தனது மகள் ஜனனியுடன் ரஜினிகாந்தை ஒட்டலில் சந்தித்தார்.

    அப்போது ரஜினி சபாநாயகர் செல்வத்திடம் நலம் விசாரித்துள்ளார். தொடர்ந்து ஜனனியிடம் என்ன படிக்கிறார் என விசாரித்துள்ளார். அவர் மருத்துவ முதுகலை படிப்பதை அறிந்து ரஜினி அவரை பாராட்டியுள்ளார்.

    பின்னர், புதுவையின் அரசியல் நிலவரம் குறித்து ரஜினிகாந்த் கேட்டறிந்தார். புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமியை பற்றி கேட்டறிந்த அவர் மிக எளிமையான முதல்-அமைச்சர் என கேள்விபட்டுள்ளதாக ரஜினிகாந்த் சபாநாயகர் செல்வத்திடம் தெரிவித்துள்ளார்.

    முன்னாள் அமைச்சரும், முன்னாள் எம்.பி.யுமான கண்ணன் நாளை மாலை தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது கட்சி தொடங்கும் முடிவை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. #FormerMPKannan
    புதுச்சேரி:

    முன்னாள் அமைச்சரும், முன்னாள் எம்.பி.யுமான கண்ணன் புதுவை அரசியலில் முக்கிய சக்தியாக திகழ்ந்து வந்தார்.

    சமீப காலமாக அரசியலில் ஏற்பட்ட பல்வேறு பிரச்சினைகளால் எதிலும் தீவிரம் காட்டாமல் இருந்து வந்தார்.

    சமீபத்தில் அவரது ஆதரவாளர்கள் அவரை சந்தித்து புதிய கட்சி தொடங்க வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். ஆனால், எந்த முடிவும் எடுக்காமல் கண்ணன் மவுனம் காத்து வந்தார்.

    இந்த நிலையில் கண்ணன் நாளை மாலை தனது ஆதரவாளர்கள் கூட்டத்தை கூட்ட உள்ளார். அதில், விரிவாக ஆலோசனை நடத்தப்பட இருக்கிறது. அப்போது கட்சி தொடங்கும் முடிவை எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.



    காங்கிரஸ் கட்சியில் முன்னணி தலைவராக இருந்த கண்ணன் மூப்பனார் தலைமையில் த.மா.கா. கட்சி உதயமானபோது அந்த கட்சிக்கு சென்றார்.

    பின்னர் 2 தடவை தனியாக கட்சி தொடங்கி நடத்தி வந்தார். ஒவ்வொரு தடவையும் கட்சியை கைவிட்டு விட்டு காங்கிரஸ் கட்சியில் மீண்டும் சேர்ந்தார்.

    கடைசியாக காங்கிரஸ் கட்சியில் மேல்-சபை எம்.பி.யாக இருந்தார். பின்னர் கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பாக அவர் அ.தி.மு.க.வில் சேர்ந்தார். ராஜ்பவன் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராகவும் களம் இறங்கினார். ஆனால், வெற்றி கிடைக்கவில்லை.

    இதன்பிறகு அ.தி.மு.க.விலும் அவர் எந்த கட்சி பணியிலும் ஈடுபடாமல் ஒதுங்கி இருந்தார். இப்போது புதிய கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பாராளுமன்ற தேர்தலின் போது இந்த கட்சி தேசிய கட்சிகள் ஏதாவது ஒரு கட்சியுடன் கூட்டணி வைக்கலாம். சட்டசபை தேர்தலில் முழு பலத்துடன் இறங்கும் திட்டத்துடன் கட்சியை நடத்துவார் என கருதப்படுகிறது. #FormerMPKannan

    ×